Friday, November 03, 2006

தாலாட்டுப் பாடல்

ராரிக்கோ ராரி மெத்தை
ராமனுக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சு மெத்தை மேலிருந்து
பஞ்சாங்கம் வாசிக்கையிலே
வயசு நூறுன்னு
வாசிச்சார் பஞ்சாங்கம்
எழுத்து நூறுன்னு
எழுதினார் பஞ்சாங்கம்.

தம்பி அழுத கண்ணீரு
ஆறாய்ப் பெருகி
அதில் யானை குளித்தேறி
குளமாய்ப் பெருகி
அதில் குதிரை குளித்தேறி
இஞ்சிக்குப் பாய்ந்து
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்குப் பாய்ந்து
மருதாணி வேரோடி
வாழைக்குப் பாய்கையிலே
வற்றியதாம் கண்ணீரு.